/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : ஜூன் 20, 2025 11:00 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலை நடைபாதையில், இடையூறாக உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள ஓரிக்கை மிலிட்டரி சாலை ஏழு கி.மீ., கொண்டது.
கனரக வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமாரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓரிக்கை பேராசிரியர் நகர் அருகில், நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள், கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. மேலும், கால்வாய் ஓரம் வளர்ந்துள்ள சீமைகருவேல முட்செடிகள், நடைபாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ளன.
இதனால், நடைபாதையை பயன்படுத்தாமல், கனரக வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, ஓரிக்கை மிலிட்டரி சாலை, பேராசிரியர் நகரில், நடைபாதையில் இடையூறாக உள்ள சீமைகருவேல முட்செடிகளையும், மின்கம்பம் மற்றும் கட்டுமான பொருட்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.