/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்
/
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், திருத்தணி வரை நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்து, மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த, கருப்படிதட்டடை கிராமத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து செங்கல் அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால், நடைபாதையில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கருப்படிதட்டடை கிராமத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள செங்கற்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.