/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமிக்கு பெண் குழந்தை வெல்டருக்கு 'போக்சோ'
/
சிறுமிக்கு பெண் குழந்தை வெல்டருக்கு 'போக்சோ'
ADDED : ஜன 26, 2024 11:06 PM

திருவொற்றியூர்:கொடுங்கையூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, பாட்டி வீட்டில் வசித்தபடி, மணலி தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்தார்.
இந்த நிலையில், கம்பெனி அருகே வசிக்கும், வெல்டிங் வேலை பார்த்த பிரசாந்த், 27, என்பவருடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஓராண்டாக பழகி வந்த நிலையில், வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவ்வப்போது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், சிறுமிக்கு ஜன., 12ல், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
மருத்துவமனையின் தகவல்படி, எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், 27, என்பவரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைதானவர் மீது, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. விசாரணைக்கு பின், நேற்று மாலை, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

