/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளம் அமைப்பு
/
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளம் அமைப்பு
ADDED : ஜன 16, 2024 11:07 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு அலுவலகங்கள் பல வாடகை கட்டடங்களில் போதிய இட வசதியின்றி இயங்கி வருகிறது.
அதுபோன்ற கட்டடங்களில், மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர, சாய்தள வசதி இல்லாமல் உள்ளது. அதேபோல், அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் பலவற்றிலும் சாய்தள வசதியின்றி பல கட்டடங்கள் இருந்தன.
அவ்வாறு, இருக்கும் கட்டடங்களில், சாய்தள வசதியை ஏற்படுத்த வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, காஞ்சிபுரம் வணிக வரி அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் தற்போது சாய்தள வசதி, பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற அலுவலகங்களிலும் சாய்தள வசதி மேற்கொள்ளப்பட உள்ளன.

