/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசியக்கொடி, டி - ஷர்ட் விற்பனை ஜோர்
/
குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசியக்கொடி, டி - ஷர்ட் விற்பனை ஜோர்
குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசியக்கொடி, டி - ஷர்ட் விற்பனை ஜோர்
குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசியக்கொடி, டி - ஷர்ட் விற்பனை ஜோர்
ADDED : ஜன 26, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:நம் நாட்டின் குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் முதல், அனைத்து தரப்பினரும் அணியும் வகையில், காஞ்சியில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடையில், தேசியக்கொடி இடம்பெற்ற, டி - ஷர்ட் பல்வேறு அளவுகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஷேக் தாவூத் கூறியதாவது:
ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லுாரிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவியர் தேசியக்கொடி இடம்பெற்ற டி - ஷர்ட் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கட்சி பாகுபாடின்றி தேசியக்கொடி இடம்பெற்ற டி - ஷர்ட் வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு வயது குழந்தைக்கான டி- - ஷர்ட் 120 முதல், பெரியவர்களுக்கு, 'எக்ஸ். எல்.,' அளவு 180 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது.
அதேபோல, கொடிக்கம்பம், கையில் ஏந்தும் தேசியக்கொடிகள், சட்டையில் அணியும் காகிதக் கொடிகள், மூவர்ண நிறத்தில் பேட்ஜ்கள், தொப்பிகள், கையில் அணியும் ரப்பர் பேண்டுகள், கையுறை என, குடியரசு தின விழாவிற்கான பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

