/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி, கல்லூரிகளில்குடியரசு தின விழா
/
பள்ளி, கல்லூரிகளில்குடியரசு தின விழா
ADDED : ஜன 26, 2024 11:51 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., யுமான செல்வம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கலாவள்ளி கொடியேற்றினார்.
மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.ன. மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் மாதாந்திர கையெழுத்து பிரதிகளை எம்.பி., செல்வம் வெளியிட்டு மாணவர்களை வாழ்த்தினார்.
காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் தேசிய கொடியேற்றினார். கட்டுரை, ஓவியம், பேச்சுபோட்டியில் வென்ற மாணவர்களுக்கு வார்டு கவுன்சிலர் மல்லிகா பரிசு வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் விழாவை ஒருங்கிணைத்தார்.
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கோமதி தேசிய கொடியேற்றினார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆரம்ப கல்வி பயின்ற, சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் கிளை இடைநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார்.
ஜூனியர் ரெட் கிராஸ், ஸ்கவுட் மாணவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் சாகச நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பரிசளிப்பு விழாவும், பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு கூட்டமும் நடந்தது.சின்ன காஞ்சிபுரம், நகர்நல மைய சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கோமதி தேசிய கொடியேற்றினார்.மாணவியரின் நிகழ்ச்சியும், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் விரிவு குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், மாநகராட்சி பூங்காவில் நடந்த விழாவில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் தேசிய கொடியேற்றினார்.
குடியிருப்போர் நல சங்க தலைவர் டாக்டர் பி.டி. சரவணன் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் அருள்நம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.திருப்பூர் குமரன் வாலிபர் சங்கத்தில் மாவட்ட செயலர் லோகநாதன் தலைமையில் நடந்தது.
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு சார்பில், திருவள்ளுவர் குருகுலம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் இல்லத்தில் குடியரசு தின விழா, தேசிய பெண் குழந்தைகள் தின விழா காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் தலைமையில் நடந்தது.
இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநில வடக்கு மண்டல துணை தலைவர் டாக்டர் சரவணன், முன்னாள் பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர்கள் டாக்டர் பொன். ஆதிரை மற்றும் டாக்டர் புஷ்பா முன்னிலை வகித்தனர்.
பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் நிஷாப்ரியா குடியரசு தினம் குறித்த வினாடி வினா போட்டியையும், தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ஓவியப் போட்டியையும்ள பெண் குழந்தைகளுக்கு நடத்தி பரிசு வழங்கினார்.

