/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிதிரிப்பேட்டை கூட்டுச்சாலையோரம் பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை

ADDED : ஜூன் 22, 2025 01:53 AM

வாலாஜாபாத், :வாலாஜாபாத் ரயில்வே பாலம் அடுத்துள்ள கிதிரிப்பேட்டை கூட்டுச்சாலையோர பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகாமையிலான சாலையில் இருந்து, கிதிரிப்பேட்டைக்கு பிரிந்து செல்லும் சாலை உள்ளது. வாலாஜாபாத் அடுத்த, வெள்ளேிரியம்மன் கோவில், பாலாஜிநகர், குப்பம், புத்தகரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இச்சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத் ரயில்வே பாலம் வந்தடைகின்றனர்.
அங்கிருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகிலான கிதிரிப்பேட்டை கூட்டுச்சாலையோரம் சரிவான பள்ளம் உள்ளது.
இச்சாலையோர பள்ளத்தால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட வசதி இயலாமல் வாகன ஓட்டிகள் சிரமபடும் நிலை உள்ளது.
மேலும், இந்த சாலை பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே, கிதிரிப்பேட்டை கூட்டுச்சாலையோர பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்தி விபத்து அபாயத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.