/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
/
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2025 01:37 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சியில், வெங்கச்சேரி, கடம்பர் கோவில், ஆதவப்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள, குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய்கள் ஆகியவற்றின் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, வெங்கச்சேரியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து வருகிறது.
மேலும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகின்றன. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க அப்பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.