
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
களியனுார்:காஞ்சிபுரம் அடுத்துள்ள களியனுாரில் உள்ள மஹாத்மா காந்தி மெட்ரிக்குலேஷன் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். முதன்மை செயல் அலுவலர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
மைக்ரோ பைனான்ஸ் முதன்மை நோடல் அலுவலர் பணபாரி பாண்டா, முதன்மை இயக்குனர் பாலகுமாரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பல்வேறு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

