/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செய்யாற்று ஓடைகளில் கோடை மழையால் நீர்வரத்து
/
செய்யாற்று ஓடைகளில் கோடை மழையால் நீர்வரத்து
ADDED : மே 22, 2025 12:50 AM

திருமுக்கூடல்:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் பரவலாக மூன்று நாட்களாக கோடை மழை பெய்தது. இதனால், நீரின்றி வறண்டு காணப்பட்ட குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் தண்ணீர் சேகரமானது.
நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த பயிர்களில், இறுதிகட்ட பாசனத்திற்கு தண்ணீரின்றி வதங்கிய நிலையிலான பயிர்களுக்கும் இந்த மழை பயன் அளித்துள்ளது.
மேலும், செய்யாற்றங்கரையொட்டி உள்ள நிலப் பகுதிகளில் மழைநீர் வழிந்தோடி அவை செய்யாற்றில் கலந்து, வயலக்காவூர், புல்லம்பாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதி செய்யாற்று படுகை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தால் செய்யாற்று படுகை வறண்டு காணப்பட்ட நிலையில், கோடை மழையால் தற்போது தண்ணீர் வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் பிரச்னையை போக்கவும் உதவியாக இருக்கும் என செய்யாற்றையொட்டிய கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.