/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா இன்று துவக்கம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா இன்று துவக்கம்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா இன்று துவக்கம்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா இன்று துவக்கம்
ADDED : ஜன 16, 2024 11:10 PM
பெருநகர், காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா, 14 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான தைப்பூச விழா, இன்று, காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவையொட்டி, தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். மாலை 5:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.
இதில், பிரபல உற்சவமான செய்யாற்றில், 22 ஊர் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தைப்பூச தரிசனம் ஜன.,26ல் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் தக்கார் வஜ்ஜிரவேலு, தொண்டை மண்டல சைவ வேளாளர் மரபினர், உபயதாரர்கள், கோவில் அர்ச்சகர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.