/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருடிய மூவர் கைது
/
தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருடிய மூவர் கைது
ADDED : ஜன 27, 2024 11:47 PM
ஒரகடம். படப்பை அடுத்த, ஒரகடத்தில் தனியார் லாரி மற்றும் பேருந்து உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, ஆத்துார் வடபாதியைச் சேர்ந்த சின்னராஜி. 29, புருஷோத்தமன், 30, பழைசீவரத்தைச் சேர்ந்த அரவிந்த் ராஜ், 31 ஆகிய மூன்று பேரும் இரவு பணிக்கு வந்தனர்.
அப்போது, லாரியில் பயன்படுத்தக் கூடிய, 57 'எலக்ட்ரானிக் கன்ட்ரோலர்' எனப்படும், லாரி உதிரி பாகத்தை வெளியே எடுத்து சென்று விற்பனை செய்ய பதுக்கியுள்ளனர். அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய்.
இதை கண்ட காவலாளி, இது குறித்து ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.