/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருக்காலிமேடில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்குவது எப்போது?
/
திருக்காலிமேடில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்குவது எப்போது?
திருக்காலிமேடில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்குவது எப்போது?
திருக்காலிமேடில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்குவது எப்போது?
ADDED : ஜூலை 02, 2025 01:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடில் பயன்பாடில் இல்லாத பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு கவரை தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து புதிய அங்கன்வாடி மைய கட்டடம் முடிவு செய்யப்பட்டு, அங்கன்வாடி மையம் அதே பகுதியில் உள்ள நாட்டு ஓடு வேயப்பட்ட வீட்டிற்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டது.
தற்போது வாடகை வீட்டில், போதுமான இடவசதி இல்லாமல், நெருக்கடியான இடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குவதால், இங்கு பயிலும் குழந்தைகள் ஆடி, பாடி விளையாடி கல்வி கற்க முடியாத முடியாத சூழல் உள்ளது.
மேலும், நாட்டு ஓடு வேயப்பட்ட பழைய வீடு என்பதால், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உளளது.
எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக அங்கன்வாவடி மைய கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.