/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புது அங்கன்வாடி மையம் திறக்கும் தேதி எப்போது?
/
புது அங்கன்வாடி மையம் திறக்கும் தேதி எப்போது?
ADDED : ஜூலை 04, 2025 01:33 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், விரிசல் அடைந்து சேதமானது.
இதையடுத்து, ஊராட்சி கிராம சேவை மையத்தில் உள்ள சிறு அறையில், அங்கன்வாடி மையம் தற்போது செயல்பட்டு வருகிறது.
இங்கு, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், குழந்தைகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குண்டுபெரும்பேடு ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.