/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
/
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
ADDED : ஜூன் 06, 2025 01:32 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில், மின்வாரியத்தின் சார்பில், மின் கம்பங்கள் நடப்பட்டு அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மின்கம்பங்களில், அரசியல் கட்சி, ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், சமீப நாட்களாக விளம்பர தட்டிகள் கட்டி வருகின்றனர்.
சாலையோர மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் கட்டுவதால், வாகனங்களில் செல்வோரின் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. மேலும், காற்று வீசும் நேரங்களில் மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள, விளம்பர தட்டிகள் கழன்று வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.
வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். விளம்பர தட்டிகள் வைப்பது குறித்து, நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாத நிலை, இப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே, சாலையோர மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.