/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் கைது
/
சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் கைது
ADDED : ஜன 27, 2024 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் 10வது தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி ரமேஷ், 21. இவர், நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த, அரசு பள்ளியில் படிக்கும், 10 வயது சிறுமியை வீட்டிற்குள் இழுத்து சென்று, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
அந்த சிறுமி தப்பி வெளியே ஓடிச்சென்று, பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், புழல் போலீசில் புகார் செய்தனர். போலீசார், ரமேஷை பிடித்து விசாரித்தனர். அவர், கஞ்சா போதையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
போலீசார், அவரை கைது செய்தனர்.

