/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தினமும் அம்மன் :09;அல்லல் தீர...
/
தினமும் அம்மன் :09;அல்லல் தீர...
ADDED : ஜூலை 25, 2024 02:38 AM

விரக்தியால் வாழ்க்கை கசக்கிறதா... நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலுக்கு வாருங்கள்.
பழையாற்றின் கரையிலுள்ள வடிவீஸ்வரம் கோயிலில் சுந்தரேஸ்வரருடன் அழகம்மன் இருக்கிறாள். ஆடி வெள்ளியன்று இங்கு விளக்கேற்றினால் உடல்நலம் சிறக்கும். விருப்பம் நிறைவேறும். குறை தீர குங்குமத்தால் அர்ச்சனை செய்கிறார்கள். ஆடி பவுர்ணமியன்று வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும். விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.
மூலவரை பார்த்தபடி சூரியன், சந்திரன் உள்ளனர். கோட்டாறு வடிவீஸ்வரம் உடைய நயினார், அழகிய மங்கை நாச்சியார் என கல்வெட்டில் சுவாமி, அம்மனின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
எப்படி செல்வது
நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,
நேரம் அதிகாலை 5:30 - 11:00 மணி மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு 99420 75342