/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பம்பை ஆற்றில் மூழ்கி பலி
/
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பம்பை ஆற்றில் மூழ்கி பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பம்பை ஆற்றில் மூழ்கி பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பம்பை ஆற்றில் மூழ்கி பலி
ADDED : பிப் 06, 2024 03:04 AM
நாகர்கோவில்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் ரான்னி அருகே பம்பை ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலியாயினர்.
ரான்னி அருகே உதிமூட்டைச் சேர்ந்தவர் அனில் குமார் 52. மகள் நிரஞ்சனா 17. இவரது தம்பி மகன் கௌதம் 13. தங்கை அனிதா 40. இவர்கள் நான்கு பேரும் பம்பை ஆற்றில் குளிக்க சென்றனர். நிரஞ்சனாவும், அனிதாவும் துணி துவைத்த போது கௌதம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை கண்ட அனில் குமார் ஆற்றில் குதித்தார்.
அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட நிரஞ்சனா, அனிதா அவர்களை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் தண்ணீர் இழுத்து சென்றது. அவர்களது கூச்சல் கேட்டு அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் அனிதாவை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மூன்று பேர் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
ரான்னி போலீசார் விசாரிக்கின்றனர்.