தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மஞ்சப்பை விருது பெறவிண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது பெறவிண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது பெறவிண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 19, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மஞ்சப்பை விருது பெறவிண்ணப்பிக்கலாம்

கரூர்: மஞ்சப்பை விருதுகளை பெற, மே 1க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பங்களிப்பை செய்த பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. இதில் மூன்று பள்ளிகள், மூன்று கல்லுாரிகள், மூன்று வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும். முதல் பரிசு, 10 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 5 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை, கரூர் கலெக்டர் அலுவலக இணையதளம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே 1க்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us