/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு கரூரில் 1,944 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 14, 2024 02:31 AM
கரூர்: கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி,, சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் குரூப் 1 தேர்வு நடந்தது. கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். அப்போது, அவர், கூறிய-தாவது:
மாவட்டத்தில், 11 மையங்களில் மொத்தம், 2,848 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்-திற்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம், 11 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தேர்வு கண்-காணிப்பு பணிக்காக சப் கலெக்டர் தலைமையில், இரு பறக்கும் படை குழுவினர் கண்காணித்தனர்.
தேர்வு எழுத விண்ணப்பித்த, 2,848 பேரில், 1,944 பேர் தேர்வு எழுதினர். 904 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இவ்வாறு, அவர், கூறினார்.