நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், தென்னிலை துக்காட்சி காட்டம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 80; விவசாயி. இவர், 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை பட்டியில் வைத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு செம்மறி ஆடு, ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. வழக்கமாக, ஒரு செம்மறி ஆடு, ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை தான் ஈன்றும். ஆனால், மூன்று குட்டிகளை, ஒரே நேரத்தில் ஈன்றுள்ளது வியப்பாக உள்ளது என, கால்நடை மருத்துவர் சரவணன் தெரிவித்தார். மூன்று குட்டியை ஈன்ற செம்மறி ஆட்டை, துக்காட்சி காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.