/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புடவைக்காரி அம்மனுக்கு முப்பூஜை வழிபாடு
/
புடவைக்காரி அம்மனுக்கு முப்பூஜை வழிபாடு
ADDED : ஆக 04, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிராமத்தில் மலை-யாள சுவாமி, புடவைக்காரி அம்மன், காமாட்சி அம்மன், பெரிய-சாமி கோவில்கள் அமைந்துள்ளன.
இக்கோவிலில், முப்பூஜை விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மா பூஜை, பூ பூஜை, செய்து கிடா வெட்டுதல் நடத்-தப்பட்டது. வரும், 7ல் வைரபெருமாள் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை செய்து கிடா வெட்டுதல், 9ல் பழைய ஜெயங்கொண்-டத்தில் உள்ள அழகுநாச்சியம்மன், மலையாள சுவாமிகளுக்கு, அபிஷேகம் ஆராதனை செய்து கிடா வெட்டுதல் மற்றும் பந்தி போஜனம் பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.