/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரராக்கியத்தில் அனைத்து பஸ்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
/
வீரராக்கியத்தில் அனைத்து பஸ்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
வீரராக்கியத்தில் அனைத்து பஸ்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
வீரராக்கியத்தில் அனைத்து பஸ்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2024 02:29 AM
கரூர்: கரூர் அருகே உள்ள வீரராக்கியத்தில் இருந்து, திருச்சி மற்றும் கரூருக்கு, ஏராளமான பணியாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக ஜவுளி, கொசுவலை, அரசு பணிகளுக்கு சென்று வரு-கின்றனர்.
இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் கரூர் மற்றும் திருச்சியில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. சில தனியார் மற்றும் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், காலை வேலைக்கு செல்லவும், மாலை வீடு திரும்பவும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். காலை நேரங்களில் கிடைக்கும் பஸ் தொங்கியபடி செல்ல வேண்டி உள்ளது. எனவே, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், அனைத்து பஸ்-களும் நிறுத்திச் செல்ல வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.