/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சவுக்கு சங்கருக்கு சர்க்கரை அதிகரிப்பு: வக்கீல் தகவல்
/
சவுக்கு சங்கருக்கு சர்க்கரை அதிகரிப்பு: வக்கீல் தகவல்
சவுக்கு சங்கருக்கு சர்க்கரை அதிகரிப்பு: வக்கீல் தகவல்
சவுக்கு சங்கருக்கு சர்க்கரை அதிகரிப்பு: வக்கீல் தகவல்
ADDED : ஜூலை 13, 2024 09:01 PM
கரூர்:''சென்னை புழல் சிறையில், சரியான சிகிச்சை வழங்காததால், யு டியூபர் சவுக்கு சங்கருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு, 400 ஐ தாண்டி விட்டது,'' என, அவரது வக்கீல் கரிகாலன் தெரிவித்தார்.
கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., அரசை விமர்சித்து பேசியதால், தமிழகம் முழுதும், யுடியூபர் சவுக்கு சங்கர் மீது, 27 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அதில், ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் கிடைத்துள்ளது. குண்டர் சட்டம் ரத்தாகி விட்டால், மற்ற வழக்குகளில் எளிதாக ஜாமின் கிடைத்து விடும்.
கரூர் டவுன் போலீசார், போட்ட பொய் வழக்கில், சவுக்கு சங்கரின் நான்கு நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, நேற்று மதியம் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரை வரும், 23 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள, மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளதால், சவுக்கு சங்கரை மருத்துவமனைக்கு, சிறை அதிகாரிகள் அழைத்து செல்லவில்லை.
சென்னை புழல் சிறையில், சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால், ரத்தத்தில் சர்க்கரை அளவு, 400ஐ தாண்டி விட்டது.
கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை, போலீசார் அழைத்து சென்று பரிசோதித்த போதுதான், இந்த விபரம் தெரிய வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.