/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 100 சதவீத பஸ்கள் இயக்கம்
/
கரூர் மாவட்டத்தில் 100 சதவீத பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 10, 2024 12:34 PM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 100 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்து கழகங்களில், வரவுக் கும் செலவுக்குமான வித்தியாச தொகையை, அரசு ஏற்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள
வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., அ.தொ.பே., உள்ளிட்ட, 24 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தன.
இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர் திருமாநிலையூர், குளித்தலை, அரவக் குறிச்சி ஆகிய போக்குவரத்து பணிமனைகள் முன், நேற்று அதிகாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் வழக்கம் போல், இயக்கும் வகை யில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நட வடிக்கையில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர்-1, கரூர்-2, குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை மூலம், அனைத்து பஸ்கள் நேற்று, வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இதுகுறித்து, கரூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கரூர் மண்டலத்தில், கரூர்-1, கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் முசிறி ஆகிய இடங்களில், ஐந்து பணிமனைகள் செயல்படுகின்றன. அதில், 138 டவுன் பஸ்களும், 141 மப்சல் பஸ்கள் உள்பட, 279 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வழக்கம் போல், 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. நிரந்தர ஊழியர்கள் பணிக்கு பணிக்கு வராவிட்டால், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பெறப் பட்ட, லிஸ்ட் மூலம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களும், தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

