/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மா.கம்யூ., கட்சியினர் 11 பேர் உடல் தானம்
/
மா.கம்யூ., கட்சியினர் 11 பேர் உடல் தானம்
ADDED : செப் 13, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், மா.கம்யூ., கட்சியை சேர்ந்த, 11 பேர் நேற்று உடல் தானம் செய்தனர்.
அகில இந்திய மா.கம்யூ., கட்சி முன்னாள் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியின், நினைவு நாளையொட்டி உடல் தானம் செய்யும் நிகழ்ச்சி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.
கரூர் மாவட்ட மா.கம்யூ., செயலர் ஜோதிபாசு, செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், முருகேசன், நகர செயலர் தண்டபாணி, சி.ஐ.டி.யு., செயலர் சுப்பிரமணி உள்பட, 11 பேர் உடல் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தை, மருத்துவக் கல்லுாரி முதல்வர் சாந்தி மலரிடம் வழங்கினர்.அப்போது, மாநில குழு உறுப்பினர் பாலா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.