/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்
/
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்
ADDED : பிப் 02, 2024 11:02 AM
கரூர்: விவசாயிகள், தொழில் துறை, நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக உள்ளது.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் கள், நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன மாநில செயலர் ஏ.சி.மோகன்: பி.எம்., கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 11.8 கோடி விவசாயிகள் பயன் பெறுவர் என அறிவித்துள்ளது பாராட்டுக்கு உரியது. பி.எம்., பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 4 கோடி விவசாயிகளை இந்தாண்டு சேர்ப்பது வரவேற்கத்தக்கது. சிறு, குறு உணவு துறையை மேம்படுத்த, 880 கோடி நிதி ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ராஜாராம்: எதிர்வரும் தேர்தலை வைத்து, ஆடம்பர அறிவிப்பு களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், மாற்றாக இடைக்கால பட்ஜெட் அமைந் துள்ளது. ரயில், விமானம், கல்வி சேவைகள் அதிகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்றத்தக்கது. ஒரு கோடி வீடுகளில், மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு, 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு, பல்வேறு தரப்பினர் பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது. ஏழைகளையும், விவசாயிகளையும் கை துாக்கி விடும் பட்ஜெட்டாக உள்ளது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர், ஆர்.வி.எஸ். செல்வராஜ்: பிரதமர் மோடி ஆட்சியில், 600 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. மேலும், 517 சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்றத்தக்கது. அதில், கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை வேண்டும். நாடு முழுவதும், 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும். சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். பி.எம்., அவாஸ் யோஜனா கீழ், 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியது.
கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலர் கே.எஸ்.வெங்கட்ரா மன்: கால்நடை வளர்ப்பதை ஊக்குவிக்க, புதிய திட்டங்கள் உருவாக்குவது பாராட்டுக்குரியது. யூரியா தயாரிப்பை தொடர்ந்து டி.ஏ.பி. உரங்கள் தயாரிப்பிலும், நானோ தொழில்நுட்பம் கொண்டு வரப்படுகிறது சிறந்த நடவடிக்கையாகும். விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய உணவு தானியங்களை பாதுகாக்க, மிகப் பெரிய அளவில் குடோன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பூர்த்தி செய்யப்படவில்லை.
ஜி.எஸ்.டி., வரி வருவாய், 1.7 லட்சம் கோடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. ஒரு லட்சம் கோடியை எட்டும் போது, வரி குறைப்பு நிவாரணம் கொடுக்கப்படும் என்று, மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்தார். அவர் கூறியதை விட உயர்ந்தும், வரி குறைப்பு, வரி தள்ளுபடி செய்யாத காரணத்தால் பல தொழில்கள் நிறுவனங்கள் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.

