ADDED : ஜூலை 15, 2024 01:02 AM
ப.வேலுார்: ப.வேலுாரில் ஏற்பட்ட சாலை விபத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த, 10 பேர் படுகாயமடைந்தனர்.மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, 18 பேர், கேரளாவில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய, ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.
நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி, ப.வேலுார் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது, நேற்று காலை மோதியது.இதில், காயமடைந்த மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் யாதவ், 32, சிவ்குமார், 18, பகவதி, 28, மித்ரேஷ், 18, பிரியங்கா, 19, சோம்சாய்குருவே, 45, ஜெகத்சிங், 34, சந்தீப்குமார் சர்வ்தேவ், 27, சுகிராம், 32, மற்றும் பெயர் தெரியாத ஒருவர் உட்-பட, 10 பேரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ப.வேலுார் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.