/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 08, 2025 12:56 AM
குளித்தலை,  குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி பஞ்.,  காரைக்குடியை சேர்ந்தவர் தனலட்சுமி,  47;  விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மே, 22 காலை, தன் வீட்டின் அருகே கார்த்திக், இவரது மனைவி ரஞ்சிதா ஆகிய இருவரும் கொட்டகை அமைத்துக்கொண்டிருந்தனர்.
இதை தடுத்து கேட்ட தனலட்சுமியை, தம்பதியர் இருவரும் தகாத வார்த்தையில் திட்டி, தனலட்சுமி மகள் மீனாட்சியை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், கார்த்திக்,  ரஞ்சிதா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

