/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணல், கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு
/
மணல், கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே மணல், கற்கள் கடத்தியதாக, இரண்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வாளர் முருகேஷ், 36; என்பவர், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை தோரணகல்பட்டி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, லாரியில் மணல், கற்களை கடத்தியதாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த, லாரி உரிமையாளர் பாஸ்கர், 50; டிரைவர் மனோகர், 60; உள்பட இரண்டு பேர் மீது சுரங்கத்துறை ஆய்வாளர் முருகேஷ், போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, பாஸ்கர், மனோகர் ஆகிய இரண்டு பேர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.