/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்ன வெங்காய வளர்ப்பு பயிற்சி அளிக்க தீர்மானம்
/
சின்ன வெங்காய வளர்ப்பு பயிற்சி அளிக்க தீர்மானம்
ADDED : ஜன 27, 2024 04:35 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், 24 பஞ்.,ல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியரசு தினவிழாவையொட்டி, எருமப்பட்டி யூனியனில் உள்ள பவித்திரம் பஞ்.,ல் கிராம சபை கூட்டம், தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பவித்திரம் பகுதியில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுவதால், தமிழக அரசு, விவசாயிகளுக்கு நவீன முறையில் சின்ன வெங்காய சாகுபடி குறித்து இலவச பயிற்சி அளிக்க வேண்டும். பவித்திரத்தில் உள்ள தனியார் வங்கியை, புதுாருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், பொட்டிரெட்டி பஞ்., தலைவர் துளசிராமன் தலைமையில், கிராம சபை கூட்டம் நடந்தது. அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல், 24 பஞ்.,களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

