/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : ஜூன் 15, 2025 01:52 AM
கரூர்,வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளர்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட சமூக நலன் துறையின் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, போட்டோ, மொபைல் எண் ஆகிய விபரங்களுடன் வரவேண்டும். இந்த நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும், 16ல் அரவக்குறிச்சி க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம், 17ல் கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 18ல் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 19ல் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 20ல் குளித்தலைவட்டார வளர்ச்சி அலுவலகம், 23ல் தான்தோன்றிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம், 24ல் தோகை மலை வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.