/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி ஆற்றில் புனிதநீராடி பால்குட ஊர்வலம்
/
காவிரி ஆற்றில் புனிதநீராடி பால்குட ஊர்வலம்
ADDED : மே 19, 2025 01:50 AM
குளித்தலை: குளித்தலை மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த மே, 4ல் கம்பம் நடுதல், பூச்சொரிதலுடன் துவங்கி-யது.
அதை தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவின், 7ம் நாளான நேற்று காலை, 53ம் ஆண்டாக பால்குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 700க்கும் மேற்-பட்டோர், கடம்பன் துறை காவிரி ஆற்றில் புனிதநீராடி பால்-குடம் எடுத்து, மங்கள வாத்தியம் முழங்க முக்கிய வீதி வழி-யாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

