/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
/
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
ADDED : மே 27, 2025 01:25 AM
கரூர், கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல், கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. 16ல் பூச்சொரிதல் ஊர்வலம், 18ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். காலை, 7:00 மணியளவில் பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என, கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் வலம் வருவதையொட்டி, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நீர் தெளித்து கோலமிட்டு வரவேற்றனர். வாழைப்பழம், தேங்காய் கொண்டு வந்து
வழிபட்டனர். கோவில் அருகே இருந்து புறப்பட்ட தேர், வாங்கல் சாலை, ஆலமரத்தெரு, ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், வெங்கமேடு, சுங்ககேட் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து
அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பசுபதி
பாளையம் அமராவதி ஆற்றில் இருந்து, புனிதநீராடி பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், மாவிளக்கு எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
குழந்தை வரம் வேண்டி, ஏற்கனவே வழிபாடு நடத்தியவர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை துாக்கி வந்து வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நாளை (28ம் தேதி) நடக்கிறது.