மனைவி மாயம்
கணவன் புகார்
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புஞ்சைதோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த, மனோகரன் மனைவி ஐஸ்வர்யா, 33; ரேஷன் கடை விற்பனையாளர். இவர் கடந்த, 13ல் வீட்டில் இருந்து ரேஷன் கடைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் மனோகரன், போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காவிரி ஆற்றில் மீன் பிடிக்க
சென்ற வாலிபர் மூழ்கி பலி
கிருஷ்ணராயபுரம், ஜன. 27-
கரூர் மாவட்டம் மாயனூர் சேர்ந்த கார்த்திக், 26; மீன்பிடிக்கும் தொழிலாளியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாயனுார் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். இரவு வரை வீடு திரும்பததால் வீட்டில் உள்ளவர்கள் நேற்று காலை காவிரி ஆற்றில் மீனவர்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மீன் பிடிக்கும் இடத்தில் ஆழமான இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. கார்த்திக் உடலை மீட்டு மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொய்கைப்புத்துாரில்
கொசு ஒழிப்பு பணி
கிருஷ்ணராயபுரம்,-
பொய்கைப்புத்துாரில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்சாயத்து, பொய்கைப்புத்துாரில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், வீடுகளில் சுற்றுபுறத்துாய்மை, பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்களை அகற்றுதல், வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, மற்றும் நல்ல குடிநீரை மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு ஆகிய பணிகள் நடந்தன. இப்பணிகளில் பொது சுகாதாரத்துறை சார்பில், மஸ்துர் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டனர்.
தியாகிகள் நினைவு
துாணுக்கு அஞ்சலி
அரவக்குறிச்சி: நகராட்சி தலைவர் முனவர் ஜான் கொடி இரக்க நிகழ்வில் கலந்து கொண்டு தியாகிகள் நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பள்ளப்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தியாகிகள் நினைவுத்தூண் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி தலைவர் முனவர்ஜான் கொடி அவிழ்ப்பு செய்து தியாகிகள் நினைவுத்தூணுக்கு மலர்த்துாவி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளம்பெண் மாயம்
போலீசார் தேடல்
குளித்தலை: குளித்தலை அடுத்த பாலவிடுதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதாயி, 40; கூலித்தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா, 19. தரகம்பட்டியில் டெய்லரிங் வேலை செய்து வந்தார். கடந்த, 24 காலை, 8:00 மணிக்கு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மீண்டும் மாலை வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும், தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் மருதாயி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகாவை தேடி வருகின்றனர்.

