ADDED : ஜூன் 26, 2025 01:47 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணத்தில், 14 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், குள்ளாயிஅம்மன், பிடாரிஅம்மன், கருப்பசாமி கோவில்கள் உள்ளன. இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. 15 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமிகளை வழிபட்டு வந்தனர். முதல் நாள் திருவிழா கடந்த, 22ல் தொடங்கியது. அன்று காலை விநாயகர், குள்ளாயிஅம்மன், பிடாரிஅம்மன், கருப்பசாமி சுவாமிகளுக்கு பால், பன்னீர்,
இளநீர், பழ வகைகள், தேன், திருநீரு, புனிதநீர் உள்பட 16 வகையான சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. 23ல் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கழுகு மரத்தை கோவில் முன்பாக நட்டனர்.பின்னர் கழுகு மரம் ஏறுதல், படுகளம் ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர். சுவாமிகளுக்கு மஞ்சள் நீராட்டுடன் விடையாற்றி நிகழ்ச்சி நடந்தது.