/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோமாரி தடுப்பூசி போடும் பணி வரும் 10 ல் தொடக்கம்: கலெக்டர்
/
கோமாரி தடுப்பூசி போடும் பணி வரும் 10 ல் தொடக்கம்: கலெக்டர்
கோமாரி தடுப்பூசி போடும் பணி வரும் 10 ல் தொடக்கம்: கலெக்டர்
கோமாரி தடுப்பூசி போடும் பணி வரும் 10 ல் தொடக்கம்: கலெக்டர்
ADDED : ஜூன் 08, 2024 02:27 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் வரும், 10 முதல் கால்நடைகளுக்கு இலவசமாக, கோமாரி நோய் தடுப்பூசி போட ப்பட உள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கோமாரி நோய் தடுப்பு ஊசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் வரும், 10 முதல், 30 வரை, 21 நாட்களுக்கு கால்நடைகளுக்கு, இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும், ஐந்தாவது சுற்று பணி நடக்க உள்ளது.
அதை தொடர்ந்து ஜூலை, 1 முதல், 10 வரை, விடுபட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். 76 குழுக்கள் மூலம், மூன்று வயதுக்குக்கு மேற்பட்ட அனைத்து கால்நடைகளுக்கும், கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். இதனால், விவசாயிகள் தடுப்பூசி போடும் நாட்களில், கால்நடைகளை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.