/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காற்றுக்கு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம்
/
காற்றுக்கு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம்
காற்றுக்கு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம்
காற்றுக்கு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 25, 2025 02:31 AM
கரூர், கரூர் மாநகராட்சியை சுற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், சூறாவளி காற்றுக்கு கிழிந்து தொங்குகின்றன. விபரீதம் ஏற்படும் முன், பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 2023 நகர்ப்புற உள்ளாட்சி விதியில், பொது இடங்கள், தனிநபர் கட்டடங்களில் அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் அமைக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டது. பெரும்பாலான விளம்பர பலகைகள், விதிகளை மீறி அமைக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ், திண்ணப்பா கார்னர் உள்பட பல இடங்களில் பெரிய அளவிலான பேனர்கள் உரிய விதிமுறை, பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன.
கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள உயரமான கட்டடங்கள், லைட் ஹவுஸ் கார்னர் புதிய அமராவதி பாலத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், தற்போது வீசும் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கிழிந்து தொங்குகின்றன. சில நேரங்களில், மின் கம்பிகள் மீது விழுவதால்
தீப்பொறி பறக்கின்றன.
கடந்தாண்டு ஆக.,ல் கரூர் மனோகரா ரவுண்டானா அருகே, தனியார் வணிக வளாக கட்டட மாடியிலிருந்து, விளம்பர பேனர் விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். உயரமான கட்டங்கள் மீது வைக்கப்படும், 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே, விபரீதம் ஏற்படும் முன், ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை, முற்றிலும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில், ''உடனடியாக பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.