/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
/
அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் பயணிகளை இறக்கி விடுவதால் பீதி
ADDED : ஜன 28, 2024 10:54 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் ஊருக்குள் பஸ்கள் வந்து செல்லாமல், பைபாஸ் சாலையிலேயே பயணிகளை இறக்கி விடுவதால் பீதியடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் இருந்து வணிகர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பஸ்கள், அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்வதில்லை.
இரவு, 10:00 மணி வரை அரவக்குறிச்சிக்கு, கரூரிலிருந்து அரவக்குறிச்சி வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. 10:00 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை செல்லும் பஸ்களில் ஏறி, அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி பயணிகள் இறங்கி கொள்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அரவக்குறிச்சி நகருக்குள் செல்ல, 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இந்த சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், இரவில் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கும் பயணிகள் மிகவும் பீதியடைந்து செல்கின்றனர்.
இரவில் திருடர்கள் தொல்லை அதிகம் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்திலேயே பயணிகள் சென்று வருகின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் பஸ்கள், அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.