ADDED : செப் 29, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், இன்று காகிதபுரத்தில் நடக்கிறது. இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் புகழூர் காகிதபுரம் டி.என்.பி.எல்., காலனி சிலப்பதிகாரம் அரங்கில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

