/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
/
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் படர்ந்த செடிகள் அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 14, 2025 05:01 AM
கரூர்: கரூர் அருகே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் நன்னியூர் புதுார் சாலை, வாங்கல் சாலையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகு-தியில் பொதுமக்கள் வசதிக்காக, மின் மாற்றி மற்றும் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளது. இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்-பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கவுள்-ளது. அப்போது, மின் கம்பங்களில் உள்ள செடிகள் மூலம், அடிக்-கடி மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் முன், மின் கம்பங்களில் உள்ள செடி-களை அகற்ற வேண்டியது அவசியம்.