/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்
/
தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்
தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்
தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் ஜூலை 15க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 04, 2025 01:41 AM
கரூர் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், விருது பெற வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொண்ட நிறுவனத்திற்கு விருது வழங்கப்படுகிறது.
இதில், பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், தனி நபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மேம்பாட்டு பணிகளை செய்யலாம். கரூர் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்கு அடிப்படையாக எடுத்து கொள்ளப்படும். இவ்விருதுக்கு தகுதியான நிறுவனங்கள், www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.