/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாமக்கல்லில் குடியரசு தின விழா கோலாகலம் 21 பேருக்கு ரூ.87.45 லட்சத்தில் நலத்திட்டம்
/
நாமக்கல்லில் குடியரசு தின விழா கோலாகலம் 21 பேருக்கு ரூ.87.45 லட்சத்தில் நலத்திட்டம்
நாமக்கல்லில் குடியரசு தின விழா கோலாகலம் 21 பேருக்கு ரூ.87.45 லட்சத்தில் நலத்திட்டம்
நாமக்கல்லில் குடியரசு தின விழா கோலாகலம் 21 பேருக்கு ரூ.87.45 லட்சத்தில் நலத்திட்டம்
ADDED : ஜன 27, 2024 04:33 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி
வகுப்பு மரியாதையை ஏற்றார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நடந்தது. கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில், கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் வெண் புறாக்களையும், வண்ண பலுான்களையும் வானில் பறக்க விட்டனர். அதையடுத்து, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவர்களது வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையிலும், அவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
மேலும், பணியாற்றிய, 42 போலீசாருக்கு முதல்வர் பதக்கங்களை கலெக்டர் உமா வழங்கினார். குடியரசு தின அணிவகுப்பை சிறப்பாக நடத்திய ஆயுதப்படை போலீசார், போலீஸ் பேண்ட் வாத்திய குழுவினருக்கு, கலெக்டர் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.
அதேபோல், 34 போலீசாருக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 287 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பள்ளிக்
கல்வித்துறை சார்பில், 4 முன்னாள் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார்.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் சென்னையில், 24 தலைமையாசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு சென்னையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை கலெக்டர் பாராட்டினார். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், என, மொத்தம், 21 பயனாளிகளுக்கு, 87.45 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், ஆறு பள்ளிகளை சேர்ந்த, 634 மாணவ, மாணவியரின் கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால், சிலம்ப ஆட்டம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது.

