/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாவை கல்வி நிறுவனங்களில் குடியரசு தினம் கொண்டாட்டம்
/
பாவை கல்வி நிறுவனங்களில் குடியரசு தினம் கொண்டாட்டம்
பாவை கல்வி நிறுவனங்களில் குடியரசு தினம் கொண்டாட்டம்
பாவை கல்வி நிறுவனங்களில் குடியரசு தினம் கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2024 04:32 AM
நாமக்கல்: நாமக்கல் பாச்சலில் உள்ள பாவை கல்லுாரி வளாகத்தில், பாவை கல்வி நிறுவனங்களை சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல், ஆசிரியர் பயிற்சி, பார்மசி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ், பிசியோதெரபி, பாவை வித்யாஸ்ரம் பள்ளி, ஐ.ஏ.எஸ்., அகாடமி ஆகிய கல்லுாரிகள் ஒருங்கிணைந்து நடத்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன், தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். துணைத்தலைவர் மணிசேகரன், தாளாளர் மங்கை நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட மாணவி லேகாஸ்ரீ, மாநில குடியரசு தின விழா அணி
வகுப்பில் கலந்துகொண்ட மாணவன் சிவசுப்ர மணிகண்டன், மாணவி சுவேதா, பாவை பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரத்னகுமார் ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
செயலாளர் பழனிவேல், இணை செயலாளர் என்.பழனிவேல், இயக்குனர் ராமசாமி, பாவை வித்யாஸ்ரம் பள்ளி முதல்வர் ரோஹித், தலைமையாசிரியை நிரஞ்சனி
உள்பட பலர் கலந்துகொண்டனர்.

