/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி திறப்பதற்கு முன்பே பணிகள் காத்திருப்பதால் ஆசிரியர்கள் கலக்கம்
/
பள்ளி திறப்பதற்கு முன்பே பணிகள் காத்திருப்பதால் ஆசிரியர்கள் கலக்கம்
பள்ளி திறப்பதற்கு முன்பே பணிகள் காத்திருப்பதால் ஆசிரியர்கள் கலக்கம்
பள்ளி திறப்பதற்கு முன்பே பணிகள் காத்திருப்பதால் ஆசிரியர்கள் கலக்கம்
ADDED : ஜூன் 04, 2024 03:58 AM
ராசிபுரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மிகவும் பிற்பட்டோர், பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க, அவர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் இடை நிற்றலின்றி கல்வியை தொடர, கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்க வசதியாக அரசு, தனியார், அரசு உதவிபெறும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வங்கி கணக்கு தொடங்குவதற்கு வசதியாக பள்ளி மாணவர்களுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆதார் எடுக்க, பயோ மெட்ரிக் புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஆதார் மையத்தை ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் வங்கி கணக்கை தொடங்கும்போதே பள்ளி மாணவர்களின் ஆதாரை இணைப்பதுடன், 'எமீஸ்' பதிவில் வங்கி விபரங்களை பதிவிடவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆதார் மையம், வங்கி கணக்கு தொடங்குவதற்கு பல்வேறு ஏஜன்சிகளை நியமித்திருந்தாலும், மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் விபரங்களை பெற்று ஆதாரை புதுப்பிப்பது, வங்கி கணக்கு தொடங்குவது, அதை, 'எமீஸ்'ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்கள் தான் செய்ய வேண்டியிருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பே, இப்பணிகள் வரிசை கட்டி காத்திருப்பதால் ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.