/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் விழாவையொட்டி விடுமுறை வெறிச்சோடிய கரூர் நகர சாலைகள்
/
பொங்கல் விழாவையொட்டி விடுமுறை வெறிச்சோடிய கரூர் நகர சாலைகள்
பொங்கல் விழாவையொட்டி விடுமுறை வெறிச்சோடிய கரூர் நகர சாலைகள்
பொங்கல் விழாவையொட்டி விடுமுறை வெறிச்சோடிய கரூர் நகர சாலைகள்
ADDED : ஜன 17, 2024 11:37 AM
கரூர்: கரூரில் பொங்கல் விழாவையொட்டி, நேற்று பெரும்பாலான வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடந்த, 14ல் போகியுடன் பொங்கல் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் வீடுகளில், சூரிய பொங்கல் கொண்டாடப்பட்டது. நேற்று கிராமப்புறங்களில், மாட்டு பொங்கலை விவசாயிகள் கொண்டாடினர்.
இதையடுத்து, கரூர் நகரில் பல வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால், கரூரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜவஹர் பஜார், கோவை, தின்னப்பா கார்னர் சாலை, சேலம் பழைய சாலை ஆகியவற்றில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று காணும் பொங்கலையொட்டி, கரூர் நகரில் மேலும் பல வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.