/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அரசின் 'செட்' சான்றிதழ் பெற ஜூன் 10ல் பயிற்சி முகாம்
/
மத்திய அரசின் 'செட்' சான்றிதழ் பெற ஜூன் 10ல் பயிற்சி முகாம்
மத்திய அரசின் 'செட்' சான்றிதழ் பெற ஜூன் 10ல் பயிற்சி முகாம்
மத்திய அரசின் 'செட்' சான்றிதழ் பெற ஜூன் 10ல் பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 06, 2025 01:25 AM
கரூர் மத்திய அரசின் 'செட்' சான்றிதழ் பெறுவது தொடர்பாக பயிற்சி முகாம் வரும், 10ல் நடக்கிறது.
மத்திய அரசு சார்பில், 'செட்' என்ற 'ஜீரோ டிபெக்ட் ஜீரோ எபெக்ட்' எனப்படும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தினை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் தயாரிப்பதை ஊக்குவிக்கும் திட்டமாகும். இந்த சான்றிதழ், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பம், கருவிகளை பயன்படுத்தி தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலில் குறைந்த தாக்கத்துடன் உயர் தரம் மற்றும் உயர் உற்பத்தித்திறனை அடைதல், போட்டித்தன்மை மற்றும் ஏற்றுமதிகளை மேம்படுத்துதல் ஆகிய
அடிப்படையில் அளிக்கப்படுகிறது
. இச்சான்றிதழ் பெறுவதற்கு https://zed.msme.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக பயிற்சி முகாம் வரும், 10 காலை, 10:00 மணிக்கு கரூரில் உள்ள ஹேமலா ேஹாட்டலில் நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு கரூர் தான்தோன்றிமலை மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.