/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூடப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்கள் திறக்கப்படுமா?
/
மூடப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்கள் திறக்கப்படுமா?
ADDED : ஜன 11, 2024 11:41 AM
கரூர்: சேலம்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில், மிக குறைந்த பயன்பாடு காரணமாக, மூடப்பட்ட மூன்று ரயில்வே ஸ்டேஷன்களை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர்-சேலம் இடையே புதிய ரயில்வே வழித்தடம் கடந்த, 2013 முதல் செயல்பட்டு வருகிறது. அதன் வழியாக நாள்தோறும், 10 க்கும் மேற்பட்ட பயணிகள், சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த, 2018 ல் மத்திய ரயில்வே வாரிய வணிக த்துறை அதிகாரிகள், அதிக ரயில்கள் இயக்க மில்லாத, வழித் தடங்களில் இயங்கிய ரயில் ஸ்டேஷன்களில் இருந்து, நாள் தோறும் குறைந்தப்பட்சம், 25 பயணிகள் ஏறி செல்லாத ரயில்வே ஸ்டேஷன்களை மூட உத்தரவிட்டனர்.
அதன்படி, சேலம்-திருச்சி வழித்தடத்தில் உள்ள, புதுச்சத்திரம் (நாமக்கல்) லட்டிவாடி (கரூர்) மேக்குடி (திருச்சி) ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் கடந்த, சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சேலம், ஈரோடு வழியாக இயக்கப்பட்ட, மூன்று பயணிகள் ரயில்கள் கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் வழியாக, தென் மாவட்டங்களு க்கு இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்சி-கரூர் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில், சேலம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதனால், மூடப்பட்ட புதுச் சத்திரம், லட்டிவாடி மற்றும் மேக்குடி ரயில்வே ஸ்டேஷன்களை பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் திறந்து, வழக்கம் போல் அனைத்து ரயில்களையும் நிறுத்தி, செல்ல வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

