/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வளர்ச்சியை நிலைநாட்ட 100 சதவீத ஓட்டுப்பதிவு'
/
'வளர்ச்சியை நிலைநாட்ட 100 சதவீத ஓட்டுப்பதிவு'
ADDED : ஜன 26, 2024 10:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். இதில், 22 பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும், 10 மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட, 32 பேருக்கு 42.50 லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கலெக்டர் சரயு பேசியதாவது:
18 வயது நிரம்பியர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சரிபார்த்து, தேர்தலில் ஓட்டளிக்கும் கடமையை தவறாது செய்ய வேண்டும். நாட்டின் இறையாண்மை, தேசபற்று, வளர்ச்சியை தேர்தலின் போது, 100 சதவீதம் ஓட்டளிப்பதன் மூலம் நிலை நாட்ட முடியும். இளம் தலைமுறையினர், 'என் வாக்கு, என் உரிமை' என்பதை உணர்ந்து, தங்கள் ஓட்டை செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், தனி தாசில்தார் (தேர்தல்) ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி தாசில்தார் விஜயகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

