/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே பயங்கரம் பட்டாசு குடோனில் வெடி விபத்து
/
ஓசூர் அருகே பயங்கரம் பட்டாசு குடோனில் வெடி விபத்து
ஓசூர் அருகே பயங்கரம் பட்டாசு குடோனில் வெடி விபத்து
ஓசூர் அருகே பயங்கரம் பட்டாசு குடோனில் வெடி விபத்து
ADDED : ஜன 26, 2024 10:10 AM
ஓசூர்: ஓசூர் அருகே, பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் கருகி நாசமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் சாலையில், ஜி.மங்கலத்தில் ஓசூரை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. அதில் நேற்று மாலை, 5:15 மணியளவில் கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. ஓசூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். ஆனால், வெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகில் செல்ல முடியாதவாறு பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி, அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு வரப்பட்ட நீருடன் தீயணைப்பு வீரர்கள், இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்த போதும், தீயை முற்றிலுமாக அணைக்க முடியவில்லை.
பட்டாசுகள் வெடித்து சிதறியதால், குடோனுக்கு அருகில் ரோஜா தோட்டம், செங்கல் சூளைகளில் வேலை பார்த்தவர்களை, தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றினர். பட்டாசு குடோனில் யாரும் இல்லாததாலும், அருகில் குடியிருப்புகள் இல்லாததாலும், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை.
அதிகளவில் பட்டாசு
வடிவேல், 5,000 கிலோ பட்டாசுகளை வைத்துக் கொள்ள குடோனுக்கு அனுமதி வாங்கியுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு அதிகளவில் பட்டாசுகள் விற்பனை போக, குறைந்தளவிலேயே பட்டாசுகள் இருந்திருக்கும் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு மணி நேரத்திற்கும் மேல் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால், குடோனில் அனுமதிக்கப்பட்ட, 5,000 கிலோவுக்கு அதிகமான பட்டாசுகள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும், அதிகாரிகள் இது குறித்து முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற,
குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

